மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்க விதிமுறைகள்: மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு!

மதுரை: மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெறவுள்ள நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் தொடர்பான மண்டகபடிகளில் மற்றும் இதர இடங்களில் பக்தர்களால் அன்னதானம், பிரசாத உணவுகள், சர்பத், நீர் மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் வழங்கப்படும்.

இந்நிலையில், அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு..

*மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது.

*தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

*அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக மாநகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும்.

*அன்னதானம், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று வழங்க வேண்டும்.

*உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை (Whatsapp No.) எண்.9444042322-ல் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்க விதிமுறைகள்: மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: