துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை அழைத்து போலீசார் விசாரணை

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முகமது நஜிப்(20). இவர் தனது செல்போனில் உள்ள துப்பாக்கி போட்டோவை காண்பித்து, ‘’இதனை சர்வீஸ் செய்யவேண்டும் இதுபற்றி விவரம் தெரியுமா’’ என தனது பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதுடன் இதுசம்பந்தமாக உடனடியாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், போலீசார் வந்து முகமது நஜிப்பை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், அவரது தந்தை முகமது அர்ஷட் (57) என்பவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் என்பதும் கடந்த 2006ம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏர்கன் வகை துப்பாக்கியை 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதும் பின்னர் அந்த துப்பாக்கி கடந்த 7 வருடத்திற்கு முன்பு பழுதானதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய குண்டுகளை போலீசார் கைப்பற்றினர். முறையான ஆவணங்கள் உள்ளதா என்றும் விசாரிக்கின்றனர்.

The post துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை அழைத்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: