லிமா: பெரு தலைநகர் லிமாவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி சிங் (18), 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச் சுற்றில், சுருச்சி சிங் 243.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை மனு பாக்கர் 242.3 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தாண்டில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் சுருச்சி சிங் பெறும் 2வது தங்கப்பதக்கம் இது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஏற்கனவே, இவர் 10மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சுருச்சி சிங் உடன் இணைந்து ஒரு வெண்கலத்தை கைப்பற்றி இருந்தார்.
The post துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங் தங்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.