கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜாதியை ஊக்கப்படுத்த கூடிய சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா . அந்த சங்கங்களின் சார்பில் நடத்தப்பட கூடிய கல்வி நிறுவனங்களின் பெயர்களின் சாதி பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்து விளக்க அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்தி இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில், சங்கத்தின் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் திருத்தும் செய்து அரசை அணுக வேண்டும் என்று மனுதாரர் சங்கத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். மேலும் அந்த உத்தரவில்

* சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

* சாதி பெயர்களை திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.

*ஜாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கி சட்ட திருத்தத்தில் திருத்தும் செய்ய கூடிய பணிகளை 3 மாதங்களுக்குள் துவங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

* ஜாதி சங்கங்கள் நடத்த கூடிய பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பெயர் பலகைகளில் உள்ள ஜாதி பெயர்கள் இடம் பெற கூடாது என உத்தரவிட நீதிபதி அந்த பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

* அதே போல் அரசு நடத்த கூடிய கள்ளர் சீர்திருத்தப்பள்ளி, ஆதிதிராவிடர் நலன்பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசு பள்ளி என்று பெயர்சூட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி அந்த பள்ளியில் ஒரு வேலை நன்கொடையாளர்கள் யாரேனும் பெயர்கள் சூட்டப்பட்டால் அவர்களுடைய பெயர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்றும் அவர்களுடைய ஜாதி பெயர் இடம் பெற கூடாது என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

The post கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: