டாகா: வங்கதேசத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு அக்டோபரில் இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடும். அதே மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்தியா, அங்கு 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளிலும், நவம்பர் மாதம் இந்தியாவுக்கு விளையாட வரும் தென் ஆப்ரிக்காவுடன் 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளில் மோதும்.
இடையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான அட்டவணை ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் வருவதை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் நேற்று உறுதி செய்துள்ளது. அங்கு தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள், டி20 தொடர்களில் இந்தியா விளையாடும்.அதன்படி ஆக. 17, 20, 23 தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், ஆக. 26, 29, 31 தேதிகளில் டி20 போட்டிகளும் நடத்தப்படும். இந்த தொடரில் விளையாட ஆக. 23ம் தேதி வங்கதேசம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கிருந்து செப்.1ம் தேதி இந்தியாவுக்கு திரும்ப வந்தடையும்.
The post ஆகஸ்ட்டில் கிரிக்கெட் தொடர்: வங்கம் செல்லும் இந்தியா appeared first on Dinakaran.