ஐபிஎல் ஏலத்தின்போது பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு, ஆட்டத்தில் கோட்டை விட்டு ரசிகர்களை நோகடித்த முன்னணி வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா திகழ்கிறார். ரூ.16.30 கோடிக்கு ஏலம் போன இவர், 5 போட்டிகளில் ஆடி, வெறும் 56 ரன் மட்டுமே எடுத்துள்ளார். சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு, ரூ.18 கோடி ஏலத்தொகையாக கிடைத்தது. இவர், வெறும் 85 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். பஞ்சாப் அணியால், ரூ. 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல், 5 போட்டிகளில் ஆடி 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து அந்த அணியை வாட்டி வதைத்து வருகிறார்.
இந்த பட்டியலில் அதிகபட்சமாக, லக்னோ அணியால், ரூ. 27 கோடி தொகை்கு ஏலம் எடுக்கப்பட்ட, கேப்டன் ரிஷப் பண்ட், 5 இன்னிங்ஸ் ஆடி, வெறும் 40 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரரான டிரென்ட் போல்ட், ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவர், 6 போட்டிகள் ஆடி, 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேசமயம், லட்சங்களில் ஏலம் எடுக்கப்பட்ட பல இளம் வீரர்கள் தங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய துாண்களாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post ஆடாமலே கோடிகளை அள்ளிய பிரபலங்கள் appeared first on Dinakaran.