மும்பை அணிக்கு எதிரான, ஐபிஎல் 29வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஆடிய கருண் நாயர், 40 பந்துகளை எதிர்கொண்டு 89 ரன்களை குவித்தார். 3 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது முதல் முறையாக ஐபிஎல்லில் ஆடியுள்ள கருண் நாயர், முதல் போட்டியிலேயே அரை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், 2018ம் ஆண்டு, பஞ்சாப் அணிக்காக ஆடியபோது, கருண் நாயர் கடைசியாக அரை சதம் விளாசினார். அதற்கு பின், 7 ஆண்டு இடைவெளிக்கு பின் தற்போதுதான் அரை சதம் அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், 2520 நாட்கள் இடைவௌியில் ஒரு வீரர் அரை சதம் விளாசுவது இதுவே முதல் முறை.
The post 2520 நாள் இடைவெளியில் அரை சதமடித்த கருண் appeared first on Dinakaran.