விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பு

விருதுநகர்: கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் எதிரிகளுக்கு தண்டனைகள் கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய சரகம் வெங்கடாசலபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாதியான சீனிவாசன் மகன் குமரன்(56/2020) என்பவரின் வீட்டின் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த அயில்சாமி மகன் மாரிமுத்து(27/2025) எனிபவர் மாலை நேரங்களில் அவரது நண்பருடன் மது அருந்தி வந்தவரை வாதியும் அவரது தம்பி இறந்த நபரான சிவக்குமார்(50/2020) என்பவரும் கண்டித்ததற்கு 17.09.2020 அன்று இரவு 11.00 மணியாளவில் எதிரி மாரிமுத்து அருவாளுடன் வந்து சிவக்குமாரை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 18.09.2020ம் தேதி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கில் இன்று (15.04.2025) விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மேற்படி எதிரியை குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000/- அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

The post விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: