திருநங்கையர்களின் மாண்பை உறுதிசெய்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘தேசிய திருநங்கையர் நாள்’ வாழ்த்து

சென்னை: திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தேசிய திருநங்கையர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏப்ரல். 15 தேசிய திருநங்கையர் நாளில் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, மாண்பை உறுதி செய்வோம். புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர்களின் சுயமரியாதை காக்கும் பெயர் தந்தவர் கலைஞர். நாட்டிலேயே முதன்முதலாக திருநர்களுக்கென நலவாரியம் அமைத்தவர் கலைஞர். கட்டணமில்லா பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என அடுத்தக்கட்டம் செல்கிறது நமது அரசு. புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல்படையில் திருநர்கள் என அடுத்தகட்டம் செல்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

The post திருநங்கையர்களின் மாண்பை உறுதிசெய்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘தேசிய திருநங்கையர் நாள்’ வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: