புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் போலீஸ் ஒப்படைத்தது. போலி மருந்து விவகாரத்தில் பலரை விசாரிக்க உள்ளதால் புதுவையில் சிபிஐ அலுவலகம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னணி மருந்து நிறுவனங்களின் மருந்துகள் அனைத்தும் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
