தமிழகத்தில் போக்குவரத்துறை சார்புஇல் விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் தொடர்ச்சியாக பொதுமக்களின் வருகைக்கேற்ப பல்வேறு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரக்கூடிய சூழலில் தற்போது முதன் முறையாக அரசு விரைவு போக்குவரத்து துறை சார்பில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை தனியாரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
குறிப்பாக பண்டிகை காலம் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு அதிக தொலைவில் செல்ல கூடிய பேருந்துகள் குறைந்த அளவில் இருப்பதால் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த குறையை போக்கும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக 20 தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மே மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கபடும் என்றும், பொதுமக்களின் வரவேற்புக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்துதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் தனியாரிடம் இருந்து பேருந்துகளை வாடகைக்கு பெற்று இயக்கப்பட்டு வரும் சூழலில் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
The post பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு..! appeared first on Dinakaran.