இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

சென்னை: இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி(58) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அவருக்கு வயது 58. கடந்த 2002-ம் ஆண்டு ஶ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற படங்களையும் ஸ்டான்லி இயக்கியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ‘ பெரியார் ‘ படத்தில் அறிஞர் அண்ணாவாக நடித்து கவனம் பெற்றார்.

தொடர்ந்து ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சர்கார்’, ‘பொம்மை நாயகி’ என பல படங்களில் நடித்தார். ஆண்டவன் கட்டளை படத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பவராக அவர் வந்து செல்லும் காட்சிகள் வரவேற்பைப் பெற்றது. கடைசியாக விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திலும் நடித்திருந்தார். எஸ்.எஸ். ஸ்டான்லி மறைந்த இயக்குநர் மகேந்திரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி (57) சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவரது உடல் இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படும் எனத் தெரிகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: