அமெரிக்க காதலியை மணந்தார் சர்வானந்த்

ஜெய்ப்பூர்: தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் சர்வானந்த், தமிழில் வெளியான ‘காதல்னா சும்மா இல்ல’, ‘நாளை நமதே’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘கணம்’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் அவரும், அமெரிக்காவில் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ரக்‌ஷிதா ரெட்டியும் கடந்த சில வருடங்களாக காதலித்தனர். மறைந்த முன்னாள் அமைச்சர் போஜ்ஜல கோபாலகிருஷ்ணா ரெட்டியின் பேத்தி ரக்‌ஷிதா ஷெட்டி. கடந்த ஜனவரி 26ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் சர்வானந்த், ரக்‌ஷிதா ரெட்டி நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ராஜஸ்தானில் ஜெய்ப்பூரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் திருமணம் நடந்தது. ராம் சரண், சித்தார்த், வம்சி மற்றும் திரையுலகினர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். அடுத்த வாரம் ஐதராபாத்தில் சர்வானந்த், ரக்‌ஷிதா ரெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

The post அமெரிக்க காதலியை மணந்தார் சர்வானந்த் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: