31வது போட்டியில் இன்று சம பலத்துடன் மோதும் பஞ்சாப் – கொல்கத்தா

* முல்லன்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
* பஞ்சாப் அணி இதுவரை, 5 போட்டிகளில் ஆடி 3ல் வெற்றி, 2ல் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.
* கொல்கத்தா அணி, 6 போட்டிகளில் ஆடி, 3ல் வெற்றி, 3ல் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.
* இன்றைய போட்டி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு 6வது போட்டி. அதேசமயம், அஜிங்கிய ரகானே தலைமையிலான கொல்கத்தா அணிக்கு, இது 7வது போட்டியாக அமைந்துள்ளது.
* இந்த இரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் ஆடியுள்ளன.
* அவற்றில் கொல்கத்தா 21 போட்டிகளிலும், பஞ்சாப் 12 போட்டிகளிலும் வென்றுள்ளன.
* இப்போட்டிகளில் அதிகபட்சமாக, கொல்கத்தா 261 ரன்களையும், பஞ்சாப் 262 ரன்களையும் குவித்துள்ளது.
* குறைந்தபட்சமாக, கொல்கத்தா 109 ரன்களையும், பஞ்சாப் அணி 119 ரன்களையும்
எடுத்துள்ளன.
* பஞ்சாப் அணி கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், 1, 2, 4வது போட்டிகளில் வெற்றியும், 3, 5வது போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது.
* கொல்கத்தா அணி, கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், 1, 3, 5வது போட்டிகளில் வெற்றியும், 2, 4வது போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

The post 31வது போட்டியில் இன்று சம பலத்துடன் மோதும் பஞ்சாப் – கொல்கத்தா appeared first on Dinakaran.

Related Stories: