ஃபிப்டி அடிப்பதில் கோஹ்லி செஞ்சுரி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான 28வது ஐபிஎல் லீக் போட்டியில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, அற்புதமாக ஆடி, 45 பந்துகளில் 62 ரன்களை குவித்து அவுட்டாகாமல் இருந்தார். அதனால், பெங்களூரு அணி, 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த அரை சதம் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில், 100வது அரை சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக அரை சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் (108 அரை சதம்) முதலிடத்தில் உள்ளார். இந்த ஒட்டு மொத்த சாதனைப்பட்டியலில், கோஹ்லி 2ம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் 90, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 88, இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 86 அரை சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

The post ஃபிப்டி அடிப்பதில் கோஹ்லி செஞ்சுரி appeared first on Dinakaran.

Related Stories: