ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி ஜாலியன் வாலாபாக்கில் இன்னுயிரை இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில், “ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.

வருங்கால இளம் தலைமுறையினர் நம் வருங்கால இளம் தலைமுறையினர் ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் வெல்ல முடியாத மனப்பான்மையை எப்போதும் நினைவில் கொள்வார்கள். உண்மையில் இந்திய வரலாற்றில் அதுஒரு இருண்ட அத்தியாயம். அவர்களின் தியாகம் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது” என பதிவிட்டுள்ளார்.

The post ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: