தீயில் சிக்கிய சிறுவர்களை மீட்ட 4 இந்திய தொழிலாளர்களை கவுரவித்தது சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சிறுவர்களை மீட்ட 4 இந்திய தொழிலாளர்களை கவுரவித்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த 8ம் தேதி அடுக்குமாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டது. இதனை பாரத்த அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் சாரக்கம்பம்(scaffold) மற்றும் ஏணியுடன் சிறிதும் தாமதம் இன்றி அங்கு விரைந்தனர். அவற்றை பயன்படுத்தி மூன்றாவது மாடியில் தீ விபத்தில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கரும் ஒருவர். சிங்கப்பூர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அனைவரையும் தொழிலாளர்கள் மீட்டனர்.
இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு அனைவரையும் மீட்ட 4 இந்திய தொழிலாளர்களை அந்நாட்டின் அரசு கவுரவித்துள்ளது. மனித வள அமைச்சகத்தின் உறுதி, பராமரிப்பு மற்றும் ஈடுபாடு குழுவில் இருந்து இந்தர்ஜித் சிங், சுப்பிரமணியன், சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகியோரக்கு ஏசிஇ நண்பர்கள் நாணயங்கள் வழங்கப்பட்டது.

The post தீயில் சிக்கிய சிறுவர்களை மீட்ட 4 இந்திய தொழிலாளர்களை கவுரவித்தது சிங்கப்பூர் அரசு appeared first on Dinakaran.

Related Stories: