இதனால், நள்ளிரவு 11.30 மணிக்கு சேலத்திற்கு ரயில் வந்ததும், 3 பேரும் இறங்கியுள்ளனர். பின்னர், நள்ளிரவு 12.15 மணிக்கு திருவனந்தபுரம்-நியூடெல்லி கேரளா எக்ஸ்பிரசில் முன்பதிவில்லா பெட்டியில் 3 பேரும் ஏறி ஜோலார்பேட்டைக்கு பயணித்தனர். சேலத்தை கடந்து ரயில் சென்றபோது, நவீன், படிக்கட்டு பகுதியில் அமர்ந்து பயணித்துள்ளார். சூர்யாவும், தேவேந்திரனும் கழிவறை பகுதியில் நின்றுள்ளனர்.
அப்போது, இந்தியில் பேசியபடி வாலிபர் ஒருவர் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பிறகு படிக்கட்டு பகுதிக்கு வந்து நவீனிடம் தான் அமர இடத்தை கொடுக்கும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென அவர் நவீனை தனது காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டார். இதில், ஓடும் ரயிலுக்கு அடியில் நவீன் சிக்கினார். பயணிகள் உடனடியாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து, துணியால் கையை கட்டிப்போட்டனர்.
ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தில் உடல் மூன்று துண்டுகளாகி நவீன் இறந்து கிடந்து கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட வாலிபரிடம் சேலம் ரயில்வே உட்கோட்ட போலீசார் விசாரித்தனர். அதில் அவர், ஜார்க்கண்ட் மாநிலம் துல்கா மாவட்டம் மசிலியா பகுதியை சேர்ந்த பர்தேஸ்வர் டுடூ (27) எனத்தெரியவந்தது. அவர் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.
The post படிக்கட்டில் அமர்வதில் தகராறு ஓடும் ரயிலில் இருந்து எட்டி உதைத்து பனியன் கம்பெனி ஊழியர் கொலை: ஜார்க்கண்ட் வாலிபர் கைது appeared first on Dinakaran.