புதுடெல்லி: 2026ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் செயல்முறையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூகப் பணி, மருத்துவம், அறிவியல்,வர்த்தகம், பொது விவகாரங்கள், சிவில் சர்வீஸ், மற்றும் தொழில்துறை என அனைத்து துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்நிலையில் 2026ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் செயல்முறையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது.
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்பி வைப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31ம் தேதியாகும். மேலும் இவை ராஷ்ட்ரிய புரஸ்கார் போர்ட்டலில் (https://awards.gov.in) ஆன்லைனில் பெறப்படும் என்றும் நேற்று அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இன்றி அனைத்து நபர்களும் விருதுகளுக்கு தகுதியுடையவர்கள். மருத்துவர்கள், விஞ்ஞானிகளை தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அரசு ஊழியர்கள் இந்த விருதுகளுக்கு தகுதி அற்றவர்கள்.
The post 2026ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.