கொல்கத்தா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து நடப்பு தொடரின் இறுதிப் போட்டியில் மோகன் பகான் எஸ்ஜி-பெங்களூரு எப்சி அணிகள் இன்று இரவு கொல்கத்தாவில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த 2 அணிகளும் ஏற்கனவே தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில் 2வது பட்டத்துக்காக இன்று களம் காணுகின்றன. மோகன் பகான் 2022-23ம் ஆண்டும், பெங்களூர் 2018-19ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்றன. 2 அணிகளும் 4வது முறையாக இறுதி ஆட்டத்தில் மோத உள்ளன. லீக் சுற்றில் தான் விளையாடிய 24 ஆட்டங்களில் 17 வெற்றி, 5டிரா 2 தோல்விகளை சந்தித்து 56 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்ததது மோகன் பகான்.
இந்த அணி, லீக் சாம்பியனுக்கான கேடயத்தை தொடர்ந்து 2வது முறையாக வென்றதுடன், 3.5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும் பெற்றது. மேலும் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதே நேரத்தில் பெங்களூர் 24 ஆட்டங்களில் 11 வெற்றி, 5 டிரா, 8 தோல்விகளுடன் 38 புள்ளிகளை பெற்று 3வது இடம் பிடித்தது. அதனால் பிளே ஆப் சுற்றில் விளையாடி நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் மோகன் பகான்-ஜாம்ஷெட்பூர் எப்சி உடனும், பெங்களூர்-எப்சி கோவா உடனும் மோதின. தலா 2 சுற்றுகளாக நடந்த அரையிறுதியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு வெற்றி , தோல்வி கிடைத்தது.
எனினும் மொத்த கோல்கள் அடிப்பபையில் மோகன் பகான், பெங்களூரு அணிகள் இன்று அரையிறுதியில் விளையாட உள்ளன.
The post ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: மோகன் பகான் – பெங்களூரு இறுதியில் இன்று மோதல் appeared first on Dinakaran.