சியோல்: தென்கொரியாவில் கடந்த டிசம்பர் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் அதிபர் யூன் சுக் இயோலை அரசியலமைப்பு நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது அதிகாரப்பூர்வ மாளிகையில் இருந்து நேற்று வெளியேறினார்.
முன்னாள் அதிபர் யூன், அவரது மனைவி கிம் கியோன் மற்றும் அவர்கள் வளர்த்துவந்த 11 நாய்கள் மற்றும் பூனைகளுடன் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறி அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள் சென்றனர். அதிபர் மாளிகை நுழைவு வாயிலில் வந்தபோது யூன் சுக் இயோல் காரில் இருந்து இறங்கி அங்கு திரண்டிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.
The post தென்கொரியாவில் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய யூன் சுக் இயோல் appeared first on Dinakaran.