அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரி: பதிலடி கொடுக்கும் சீனா

பெய்ஜிங்: அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக மோதல் தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டிரம்ப் சீனாவை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றார். இதில் முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு படிப்படியாக வரி சதவீதத்தை அதிபர் டிரம்ப் அதிகரித்து வந்தார். அதிகபட்சமாக 104 சதவீதம் வரி விதித்திருந்த நிலையில் சமீபத்தில் மேலும் 41 சதவீத வரிகளை விதித்து 145 சதவீதமாக அதிகரித்தார்.

சீனாவுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் சீனாவும் அமெரிக்காவை சீண்டத்தொடங்கியுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தி உள்ளது. இது தொாடர்பாக சீன வர்த்தக அமைச்சம் கூறுகையில், ‘‘சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீது 84 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதல் வரிகளை சீனா 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

The post அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரி: பதிலடி கொடுக்கும் சீனா appeared first on Dinakaran.

Related Stories: