திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில்

கிரகங்களும் தெய்வங்களும் இணைந்தே நிகழ்வுகளை நிகழ்த்துகின்றன. அதன் மாற்றங்கள் அறிவதற்கும் தெரிவதற்கும் நிகழ்வுகளே சாட்சியாக உள்ளன. இதன் அடிப்படையில்தான் கிரகங்களின் பெயர்வுகளை அறிய வாய்ப்பாக உள்ளன. கிரகங்களின் அடிப்படையில் தெய்வங்கள் வீற்றிருக்கும். திருத்தலங்கள் வழியே மாற்றங்களை செய்ய வழிவகை செய்கின்றது.தேவகுருவான பிரகஸ்பதியின் இளைய சகோதரர் உத்தி முனிவரின் மகனான தீர்க்கதா யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகம் நடத்தும் இடத்திற்கு அருகில் வந்த காமதேனு பசுவை கண்ட தீர்க்கதா யாகத்திற்கு வருவோரை உபசரிக்க வேண்டினான். காமதேனுவோ இந்திரன் ஆணையில்லாமல் இதனை என்னால் செய்யலாகாது என மறுக்கவே. கோபம் கொண்ட தீர்க்கதா காமதேனுவை கட்டிவைக்க முயன்றான். அதனால், காமதேனுவின் சாபத்திற்கு ஆளானான் தீர்க்கதா. அந்த சாப விமோசனம் பெற நாரத முனியை நாடினான் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர். திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் வேண்டினார். திருவூறலில் உள்ள நந்தியை வழிபட்டு அதன் வாயிலில் தெய்வ கங்கை வரவே சாப விமோசனம் அடைந்தார் தீர்க்கதா. இத்தலத்தில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால் புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்களில் இத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் இறைவன் ஜலநாததீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இந்த இறைவனார் உத்தராயண காலத்தில் இளம் சிவப்பு நிறத்திலும் தட்சிணாயண காலத்தில் வெள்ளி நிறத்திலும் காட்சி கொடுக்கிறார் என்பது சிறப்பு. இத்தலத்தில் கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை சமேத ஜலநாத ஈஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் நாமகரணம் செய்துள்ள கிரகங்கள் சூரியன், வியாழன், சந்திரன் ஆகியனவாகும்.

* வைகாசி விசாகத்தன்று மாம்பழம் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து தானம் செய்தால் குழந்தைப் பேறு உண்டாகும்.
* ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று இத்தலத்தில் உள்ள பார்வதி சத்ய கங்கை தீர்த்தத்தில் நீராடி வெள்ளை மொச்சையை சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தால் திருமணத்தடை நீங்கும்.
* ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று சொத்துப் பிரச்னை உள்ளவர்கள் இத்தலத்திற்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கறுப்பு நிறப் பசுவிற்கு கோதுமையில் செய்த உணவையும் அகத்திக்கீரையும் கொடுத்தால் வழக்குகளில் நல்ல தீர்வுகள் உண்டாகும்.
* மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் பன்னீர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றை அபிஷேகத்திற்கு கொடுத்தால் மாணவ – மாணவிகள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
* உத்திராயண காலத்தில் வழிபட்டால் அரசாங்க உயர் பதவிகள் கிடைக்கும்.
* தட்சிணாயண காலத்தில் வழிபட்டால் திருமணத்தடை விலகும். மேன்மேலும் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகும்.

The post திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில் appeared first on Dinakaran.

Related Stories: