ஆஸ்திரேலியாவில் பரவும் நிமோனியா வகை நோயால் அவசரநிலை அறிவிப்பு!!

நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதியதாக 5 பேருக்கு லெகியோனையர்ஸ் (Legionnaires) எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவக்கும் கடந்த மார்ச் 30 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த நோயிக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவியதற்கான காரணம் குறித்து கண்டறியும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வகை பாக்டீரியாக்கல் மனித உடம்பினுள் சென்ற 2 முதல் 10 நாள்களுக்குள் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்ட துவங்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காற்றில் பரவும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 10% உயிரிழக்கும் அபாயமுள்ளது எனவும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்றால் 80% வரையில் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஆஸ்திரேலியாவில் பரவும் நிமோனியா வகை நோயால் அவசரநிலை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: