ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லிக்கு 4வது வெற்றி

பெங்களூரு: ஐபிஎல் சீசன் 18 டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தி டெல்லி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பெற்றது. பெங்களூருவில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் கோஹ்லி, சால்ட் நல்ல தொடக்கத்தை தந்தனர். சிக்சர், பவுண்டரிகளை விளாசித் தள்ளிய சால்ட் 37 ரன்னில் (17 பந்து, 3 சிக்ஸ், 4 பவுண்டரி) துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த படிக்கல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன்பின், டெல்லி அணியில் குல்தீப் யாதவ், நிகம் அட்டகாசமாக பந்துவீசி ஆர்சிபியின் ரன் வேகத்தை மொத்தமாக கட்டுப்படுத்தினர். படிதார் (25 ரன்), ஜிதேஷ் சர்மா (3) விக்கெட்டை குல்தீப் வீழ்த்த, கோஹ்லி (22 ரன்), குருணல் பாண்டியா (18) விக்கெட் நிகம் கைப்பற்றினார்.

கடைசி கட்டத்தில் டிம் டேவிட் 4 சிக்சருடன் 20 பந்தில் 37 ரன் விளாச ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. குல்தீப் (4 ஓவர், 17 ரன்), நிகம் (4 ஓவர், 18 ரன்) தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ேக.எல்.ராகுல் 93 ரன் எடுத்தார். இதன் மூலம் டெல்லி அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பெற்றது.

The post ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லிக்கு 4வது வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: