இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி நெருக்கமானார்கள். இதற்கிடையில் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு மாணவியிடம், கலையரசன் கேட்டுள்ளார். அதற்கு மாணவி மறுத்ததால், கலையரசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், மாணவியின் புகைப்படத்தை கலையரசன், அவரது நண்பர்களான ரஞ்சித்(19), சந்தோஷ்(19) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என 5 பேர், ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
சிறுமியின் தகவலின்படி அவரது தாய் நேற்று முன்தினம் ஆலங்காயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கலையரசன் உள்பட 5 பேரையும் ‘போக்சோ’ வழக்கில் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கலையரசன், ரஞ்சித், சந்தோஷ் ஆகியோரை வேலூர் சிறையிலும், 17 வயதுள்ள 2 பேரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
The post பள்ளி மாணவி போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து பகிர்வு: சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.