கட்டுமான தொழிலாளருக்கான மரண உதவி தொகை ரூ.8 லட்சமாக உயர்வு: முதல்வருக்கு கட்டிட தொழிலாளர் சங்கம் நன்றி

சென்னை: அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளரும், முன்னாள் வாரிய உறுப்பினருமான மு.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ள அறிவிப்பில், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண உதவித்தொகை ரூபாய் 5 லட்சமாக இருந்ததை 8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் சி.வி.கணேசனுக்கும் 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்.

மேலும் பென்சன் தொகை ரூ.1200 என்பதை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அதே போல் இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதை 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட மேலும் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தோம். விடுபட்டுள்ள கோரிக்கைகள் 110- விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார் என ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கட்டுமான தொழிலாளருக்கான மரண உதவி தொகை ரூ.8 லட்சமாக உயர்வு: முதல்வருக்கு கட்டிட தொழிலாளர் சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: