ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். இதனிடையே முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங்; காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் விளையாட மாட்டார். காயம் காரணமாக தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் கேப்டனாக தோனி செயல்படுவார்; சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என்று கூறினார். 2023ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை சேப்பாக்கத்தில் கொல்கத்தா அணியை சென்னை அணி எதிர்கொள்ள உள்ளது. நடப்பு ஐ.பி.எல் சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: