ரோம்: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88). இவர், மூச்சுக்குழாய் அழற்சியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக, கடந்த பிப்ரவரி 14ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வாடிகன் சர்ச் திரும்பினார். தற்போது முழு ஓய்வு எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணியார் தம்பதி இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், வாடிகனில் ஓய்வு எடுத்து வரும் போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் திடீரென சந்தித்தனர். அப்போது அவரது உடல்நலம் பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.
The post போப் பிரான்சிசுடன் இங்கி. மன்னர் சந்திப்பு appeared first on Dinakaran.