ஒரு வாரத்திலேயே மூடப்பட்ட நீர் மோர், தண்ணீர் பந்தல்; தொண்டர்கள் குமுறல்

போளூர், ஏப். 10: போளூர் தொகுதியில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட நீர் மோர், தண்ணீர் பந்தல் திறந்ததை ஒருவாரத்திலேயே மூடப்பட்டது. இதனால் தலையில்லாமல் தள்ளாடும் அதிமுக ஆகிவிட்டதாக தொண்டர்கள் குமுகின்றனர்.

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காத்திடும் விதமாக அதிமுக நிர்வாகிகளுக்கு தனது அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிமுகவினர் நீர்-மோர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு கோடைவெயிலின் தாக்கம் தீர்த்திடவேண்டும் என்று கேட்டு கொண்டார்.

அதன்படி போளூர் பஸ்நிலையம் அருகே அதிமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் ெஜயசுதாலட்சுமிகாந்தன் கடந்த மாதம் 30ம்தேதி நீர்-மோர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி ஆகியவை வழங்கினார். தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் போளூர் எம்எல்ஏ, நகர செயலாளர், நகர நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லை. மக்கள் நலனுக்காக திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறந்த ஒரு வாரத்திலேயே திறந்த தண்ணீர் பந்தல் எங்கே என ெதரியவில்லை என்கின்றனர்.

The post ஒரு வாரத்திலேயே மூடப்பட்ட நீர் மோர், தண்ணீர் பந்தல்; தொண்டர்கள் குமுறல் appeared first on Dinakaran.

Related Stories: