பெய்ஜிங்: சீனாவின் ஹெபே மாகாணத்தில் செங்டே நகரத்தின் லாங்குவா கவுண்டியில் முதியோர் இல்லத்தில் இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 260 பேர் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இல்லத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.