டொமினிகன் குடியரசில் இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து 98 பேர் பரிதாப பலி

சான்டோ டொமின்கோ: டொமினிகன் குடியரசில் இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 98 பேர் பலியாகி உள்ளனர். 160க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமின்கோவில் உள்ள ஜெட் செட் இரவு விடுதியில் நேற்று முன்தினம் இரவு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

பாடகர் ரூபி பெரெசின் பாடலுக்கு நடனக் கலைஞர்களும், பார்வையாளர்களும் நடனமாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது, விடுதியில் 700 பேர் அமர்ந்திருந்த நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் இடமின்றி நின்றபடி நிகழ்ச்சியை ரசித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏராளமான ரசிகர்கள் இடிபாடுகளில் புதைந்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகள் மேற்கொண்டனர். 12 மணி நேர மீட்பு பணியில் 98 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு தேடல் பணி நடந்து வருகிறது. பிரபல இசைப் பாடகர் ரூபி பெரேசையும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

The post டொமினிகன் குடியரசில் இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து 98 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: