ஊட்டி, ஏப்.9: வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும், பாஜவை கண்டித்தும் ஊட்டியில் விசிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. ஒன்றிய பாஜ அரசின் பெரும்பான்மை வாத பாசிசத்தை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஒருங்கிணைந்த நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டி ஏடிசி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் (கிழக்கு) சுதாகர், (மேற்கு) புவனேஷ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் சகாதேவன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, மண்டல துணை செயலாளர் மண்ணரசன், ஊட்டி தொகுதி செயலாளர் கட்டாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் தயா நெப்போலியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வக்பு சட்ட திருத்த மசோதாவின் பாதிப்புகள் குறித்தும், பாசிச பாஜ அரசை கண்டித்தும் பேசினார்.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் கோல்ட்ரஸ், ஒன்றிய செயலாளர்கள் பாபு, பெரியசாமி, கமல், தீபக், நகர செயலாளர்கள் துயில்மேகம், கோபாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் மைக்கேல் உட்பட ஏராளமான விசிகவினர் கலந்து கொண்டனர்.
The post வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி ஊட்டியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.