வாணியம்பாடியில் பட்டப்பகலில் பயங்கரம்; தனியார் பள்ளி காவலாளி சரமாரி குத்திக்கொலை: மர்ம ஆசாமிகளுக்கு வலை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கரிமாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான்(45). இவர் இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஹாஜிரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஹாஜிரா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், முகமது இர்பான் நேற்று காலை 8 மணியளவில் தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இக்பால் சாலையில் சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இருவர் முகமது இர்பானின் சைக்கிளை வழிமறித்துள்ளனர். திடீரென கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு பைக்கில் தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த முகமது இர்பான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிந்து முன்விரோத தகாறில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேூகின்றனர். பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

The post வாணியம்பாடியில் பட்டப்பகலில் பயங்கரம்; தனியார் பள்ளி காவலாளி சரமாரி குத்திக்கொலை: மர்ம ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: