ஆலப்புழாவில் ரூ. 3 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்; பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாசி முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கலால் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 3 கோடி மதிப்புள்ள உயர்ரக கலப்பின கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் வசித்து வரும் கண்ணூரைச் சேர்ந்த தஸ்லீமா சுல்தானா (41) என்ற இளம்பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஸ்லீமா சுல்தானாவிடம் நடத்திய விசாரணையில், பிரபல மலையாள நடிகர்களான ஷைன் டோம் சாக்கோ மற்றும் நாத் பாசி ஆகியோருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கூறினார். மேலும் அவர்கள் இருவருடனும் தஸ்லீமா சுல்தான் வாட்ஸ் ஆப் மூலம் சாட்டிங் நடத்தியது தொடர்பான விவரங்களையும் கலால் துறையினர் கைப்பற்றினர். தற்போது சிறையிலுள்ள தஸ்லீமா சுல்தானாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதில் நடிகர்களுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் நாத் பாசி முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி கலால் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post ஆலப்புழாவில் ரூ. 3 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்; பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாசி முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: