21வது லீக் போட்டியில் சம பலத்தில் மோதும் கொல்கத்தா – லக்னோ
- கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் 21வது லீக் போட்டியில் கொல்கத்தா-லக்னோ அணிகள் மோதுகின்றன.
- நடப்பு சாம்பியனான கொல்கத்தா, லக்னோ அணிகள் இதுவரை தலா 4 லீக் போட்டிகளில் களம் கண்டு தலா 2ல் வெற்றியை ருசித்துள்ளன.
- இரு அணிகளும் 3வது வெற்றியை குறி வைத்து 5வது போட்டியில் இன்று மோத இருக்கின்றன.
- ரிஷப் பண்ட் தலைமையிலான புதிய அணியான லக்னோவும், அஜிங்கிய ரகானே தலைமையிலான கொல்கத்தாவும் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
- அவற்றில் லக்னோ 3, கொல்கத்தா 2 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளன.
- இந்த போட்டிகளில் அதிகபட்சமாக கொல்கத்தா 235, லக்னோ 210 ரன் விளாசியுள்ளன.
- குறைந்தபட்சமாக லக்னோ 137, கொல்கத்தா 101 ரன் எடுத்துள்ளன.
- நடப்புத் தொடரில் இந்த ஒரு போட்டியில் மட்டுமே மோதுகின்றன.
- கொல்கத்தா ஈடன் கார்டனில் 3வது முறையாக இந்த 2 அணிகளும் சந்திக்கின்றன. ஏற்கனவே இங்கு விளையாடிய 2 போட்டிகளில் இரு அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.
- இவ்விரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி, தோல்வி என மாறி மாறி தலா 3-2 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளன.
22வது லீக் போட்டியில் பாயத் தயாராகும் பஞ்சாப் திகைத்து நிற்கும் சென்னை
- ஐபிஎல் தொடரில் 22வது லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப்-சென்னை அணிகள் முல்லன்பூரில் மோதவுள்ளன.
- இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றது. ஆனால் 3வது போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.
- தோனி வழி நடத்தும் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி முதல் போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அடுத்து விளையாடிய 3 போட்டிகளிலும் சென்னை ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது.
- இன்று நடைபெறும் போட்டி, சென்னைக்கு 5வது போட்டியாகவும், பஞ்சாப் அணிக்கு 4வது போட்டியாகவும் இருக்கும்.
- இதுவரை இந்த 2 அணிகளும் மொத்தம் 30 போட்டிகளில் மோதி உள்ளன.
- அவற்றில் சென்னை 16, பஞ்சாப் 14 போட்டிகளில் வென்று உள்ளன.
- அந்த போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை 240, பஞ்சாப் 231 ரன் விளாசி இருக்கின்றன.
- குறைந்தபட்சமாக சென்னை 120, பஞ்சாப் 92 ரன் எடுத்துள்ளன.
- இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் பஞ்சாப் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- பஞ்சாப்பின் புதிய கிரிக்கெட் அரங்கமான முல்லன்பூர் மகாராஜா யாதவீந்திர சங்க அரங்கில் இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.
- இவ்விரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் பஞ்சாப் 3-2 என்ற கணக்கிலும், சென்னை 1-4 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை வசப்படுத்தின.
The post ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள் appeared first on Dinakaran.