டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு மேலும் ரூ.2 உயர்த்தியது. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலால் வரி லிட்டருக்கு மேலும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.