ஆர்ஆருக்கு அதிக வெற்றி சஞ்சு சாம்சன் சாதனை

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் 18வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (ஆர்ஆர்) 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி மோதிய முதல் மூன்று போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். காயம் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்த சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணியுடனான போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக, 32 வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் அரங்கேற்றி உள்ளார்.

கடந்த 2021 முதல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சாம்சன் செயல்பட்ட போட்டிகளில் 29ல் தோல்வி கிடைத்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. கடந்த 2008-11 ஆண்டுகளில் ராஜஸ்தான் கேப்டனாக இருந்த ஷேன் வார்ன், 31 போட்டிகளில் வெற்றியும், 24ல் தோல்வியும் சந்தித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டோரில், ராகுல் டிராவிட் 18, ஸ்டீவன் ஸ்மித் 15, அஜிங்கிய ரஹானே 9 வெற்றிகளை பெற்றுள்ளனர்.

The post ஆர்ஆருக்கு அதிக வெற்றி சஞ்சு சாம்சன் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: