வக்பு மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

புதுடெல்லி: வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் ஆதரவாக 288 வாக்குகளும் எதிர்ப்பாக 232 வாக்குகளும் பதிவானது. மாநிலங்களவையில் 128-95 வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு நேற்று நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. மேற்குவங்கம், தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பிறகு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஏராளமானோர் தேசியக் கொடியை அசைத்து, வக்பு மசோதாவை நிராகரிக்கிறோம் என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தினார்கள்.

இதே போல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர். மேலும் 40 பேரை கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் மத்திய லக்னோ பகுதியிலும் போராட்டம் நடந்தது. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, மபி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இஸ்லாமியர் பல இடங்களில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

 

The post வக்பு மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: