பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் இன்று இரவு நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பஞ்சாப் அணிக்கு இது 3வது ஆட்டம். முதல் 2ஆட்டங்களில் வென்றுள்ள ஷ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப், ஹாட்ரிக் வெற்றிக்காக வேகத்தை தொடரும். ராஜஸ்தான் அணிக்கு, முதல் 3 ஆட்டங்களுக்கு ரியான் பராக் கேப்டனாக இருந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் ‘இம்பாக்ட்’ மாற்று வீரராக களம் கண்டார். அவற்றில் கடைசி ஆட்டத்தில் மட்டும் ராஜஸ்தான் வென்றது. இன்று நடைபெற உள்ள 4வது ஆட்டத்தில் இருந்து கேப்டன் பொறுப்பை மீண்டும் சஞ்சு சாம்சன் ஏற்க உள்ளார். விக்கெட் கீப்பர் பணியை செய்ய பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் மூலம் வெற்றியை தொடர ராஜஸ்தானும் முனைப்புக் காட்டும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 ஐபிஎல் ஆட்டங்களில் மோதி இருக்கின்றன. அவற்றில் ராஜஸ்தான் 16லும், பஞ்சாப் 12லும் வென்று இருக்கின்றன. இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக ராஜஸ்தான் 226, பஞ்சாப் 223 ரன் எடுத்தன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 124, ராஜஸ்தான் 112 ரன் மட்டுமே எடுத்துள்ளன. இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மற்ற அணிகளுடன் இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் பஞ்சாப் 3-2 என்ற கணக்கிலும், ராஜஸ்தான் 2-3 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை வசப்படுத்தி இருக்கின்றன.
The post 18வது லீக் போட்டியில் ஹாட்ரிக்கை நோக்கி பஞ்சாப் நிமிரத் துடிக்கும் ராஜஸ்தான் appeared first on Dinakaran.