புதுடெல்லி: தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘‘வருங்கால வைப்பு நிதியில் (இபிஎப்ஓ) பணம் எடுக்க ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ்புக் படத்தை இணைக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது உரிமைகோரல் தீர்வு செயல்முறையை கணிசமாக முறைப்படுத்தும் மற்றும் பிஎப் உரிமைகோரல் நிராகரிப்புகள் தொடர்பான குறைகளை வெகுவாக குறைக்கும். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதியில் சோதனை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.7கோடி இபிஎப் உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளனர். மோசமான அல்லது படிக்க முடியாத பதிவேற்றங்கள் மூலமாக உரிமைகோரல் நிராகரிக்கப்புக்கான சாத்தியக்கூறுகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பிஎப் பணம் எடுக்கும் செயல்முறையில் மாற்றம்: காசோலை, வங்கி கணக்கு சரிபார்ப்பு தேவையில்லை appeared first on Dinakaran.