அவிநாசி – மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி தீவிரம்

 

அவிநாசி, ஏப்.4: அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலையானது 13 கி.மீ. நீளத்திற்கு மாவட்ட எல்லை வரை இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளளை மேற்கொண்டுள்ளனர். இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சாலையில், 25 இடங்களில் சிறுபாலங்கள் திரும்ப கட்டுதல் மற்றும் அகலப்படுத்தும் பணிகள் தொடங்கி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து சுமார் 6 கி.மீ வரை சாலை விரிவாக்கப் பணிகள் இரு புறமும் இணையாக நடைபெற்று வருகிறது. மேலும் சாலை விரிவாக்கப் பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவிநாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் செங்குட்டுவன் மற்றும் உதவி பொறியாளர் தரணிதரன் ஆகியோர் தெரிவித்தனர்.

The post அவிநாசி – மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: