வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் போராட்டம் ஏன்? திமுக எம்எல்ஏ பரந்தாமன் பேட்டி

சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று திமுக எம்எல்ஏக்கள் ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். அப்போது சென்னை எழும்பூர் இ.பரந்தாமன் (திமுக) அளித்த பேட்டி: 1995ம் ஆண்டு வக்பு சட்டத்தை திருத்தக்கூடாது, சரத்துகளை மாற்றுவது மூலம் ஒட்டுமொத்தமாக வக்பு சட்டத்தை ரத்து செய்வதற்கு, இல்லாமல் செய்வதற்கான வழிவகை தான் என முதல்வர் தெரிவித்தார்.

இருப்பினும் நாடாளுமன்றத்தில் பலம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஜனநாயகத்தின் குரல்வளைகளை நெரித்து எதிர்க்கட்சிகளின் கருத்துகளை மதிக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், திமுக எம்பிகள் ராசா, அப்துல்லா உறுப்பினர்களாக உள்ள கமிட்டியில் மேலும் பல எதிர்க்கட்சிகள் சொன்ன திருத்தங்கள் கொண்டு வர முன்வராத கமிட்டி, எதிர்ப்பு கருத்து உடையவர்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.

ஒரு மசோதவை நிறைவேற்றுவதற்கு முன்பு பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பும் போது அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால் எதிர் கருத்து உள்ளவர்கள் இடைநீக்கம் செய்த முதல் முறையாக வரலாற்று பிழையை பாஜ செய்துள்ளது. இதற்காக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக என்றும் மக்களின் உரிமைக்காக போராடும். சிறுபான்மையின மக்கள் பக்கம் நிற்கும். காயிதே மில்லத் காலம் முதல் தற்போது வரை, இனி எதிர்காலம் வரை என்றென்றும் சிறுபான்மை மக்கள் பக்கம் நிற்போம் என்பதை உறுயளிக்கும் விதமாக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம்.

The post வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் போராட்டம் ஏன்? திமுக எம்எல்ஏ பரந்தாமன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: