சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை முதல்வரின் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை அமைக்கப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* ராமதாஸ் (பாமக நிறுவனர்): பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ்க்கு சென்னையில் உருவ சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் வாழும் பாட்டாளிகளின் தோழராக உருவெடுத்த கார்ல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு. இந்த கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாமக செய்திருக்கிறது.

* பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): மார்க்சிய தத்துவ மேதை காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதை ஏற்று, இன்று காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

The post சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை முதல்வரின் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: