அத்துடன், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இருந்து, தென் மேற்கு வங்கக் கடல் வழியாக தென் தமிழகம் வரையில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதையடுத்து, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
The post வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.