அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருக்கமான நண்பர் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரர். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து பிரசாரம் செய்தார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின், எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அதாவது, அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

மஸ்க் பொறுப்பேற்ற பின்னர், இதுவரை ரூ.10 லட்சம் கோடியை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஏற்கனவே இந்த பதவியில் 130 நாட்கள் மட்டுமே பணியாற்ற மஸ்க் ஒப்பு கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் விலகுவார் என டிரம்ப், தன் அமைச்சர்களிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தன் நிறுவன பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தவதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

The post அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க் appeared first on Dinakaran.

Related Stories: