திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மெய்யூர் மந்தவெளி தெருவை சேர்ந்தவர் சேகர்(55), விவசாயி. இவரது, மனைவி வசந்தா, மகன்கள் குமரேசன், லோகேஷ் உள்ளனர். அதேபகுதியை சேர்ந்தவர் மாதவன் விவசாயி. இவர்கள் இருவருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகர் தனது நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி ஆரணி தாலுகா அலுவலகத்தில் கொடுத்தார். இதனால், மாதவன் அவரது மனைவி கஸ்தூரி, மகன்கள் சோமு, பாபு, குமார், மகள் கனகா ஆகியோர் கடந்த 30ம் தேதி சேகரின் வீட்டில் புகுந்து, முன்விரோத தகராறில் சேகர் அவரது குடும்பத்தாரை தாக்கினர். தொடர்ந்து, மாதவன் அவரது மகன்கள் சேகர் அவரது மனைவி, மகனை கத்தியால், சரமாரியாக தலை, கை மற்றும் உடலில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து, 6 பேரும் தப்பியோடினார்.
இதில், படுகாயமடைந்த சேகர், வசந்தா, குமரேசன், லோகேஷ் மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து, சேகர் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மாதவன் உட்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில், சோமு(39), கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் எஸ்ஐக்கள் அருண்குமார், சுந்தரேசன், எஸ்எஸ்ஐ கன்ராயன், சவுந்தராஜன், பட்டுசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை, செய்யாறு, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி (50), பாபு(36), குமார் (35), கனகா (32)ஆகியோரை போலீசார் கைது செய்து, போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், தலைமறை வாக உள்ள மாதவனை தேடி வருகின்றனர்.
The post பெண்கள் உட்பட 4 பேர் கைது :மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.