திருவண்ணாமலை, ஏப். 3: ருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக, எஸ்பி அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி ஆய்வு நடத்தினார். ருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நேற்று வேலூர் சரக டிஐஜி தேவராணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், எஸ்பி சுதாகர், கூடுதல் எஸ்பி பழனி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக டிஐஜி ஆய்வு செய்தார்.
கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டார். மேலும், இரவு ரோந்துப்பணியை தீவிரப்படுத்தவும், போக்குவரத்து சீரமைப்பில் தனி கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார். அதேபோல், வழக்குப்பதிவு செய்தும், கைது செய்யப்படாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்து ேகார்ட்டில் ஆஜர்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, செய்யாறில் போதை ஊசி தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட கைது நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த டிஐஜி, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும், போதை ஊசி பயன்பாடு இருக்கிறதா என்பது குறித்து தனிப்பிரிவு போலீசார் கண்காணித்து தகவல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ன்னதாக, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சுதாகர் தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதில், 21 பேர் மனு அளித்தனர்.
The post சட்டம் ஒழுங்கு நடவடிக்கை ஐஜி தேவராணி ஆய்வு appeared first on Dinakaran.