திருத்துறைப்பூண்டி, ஏப்.2: தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ரூ.4034 கோடி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிற ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ராயநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற போராட்டத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் பங்கேற்றார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் நாகலிங்கம், சரோஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோசப், ராயநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் ரஜினி சுப்பிரமணியன், கிளைச் செயலாளர் அன்பானந்தம் ராகவன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் பார்த்திபன், கிளைச் செயலாளர் நெல்சன் விவசாய சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கனகராஜ் உட்பட ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், பிச்சன் கோட்டகம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலநது கொண்டனர். இதே போன்று ஒன்றிய முழுவதும் உள்ள 32 ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The post திருத்துறைப்பூண்டியில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.