பரமக்குடி, ஏப்.5: பரமக்குடி காந்தகுளத்து ஸ்ரீ முனியப்ப சுவாமி காளிஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட உற்சவம் நடைபெற்றது. பரமக்குடி – முதுகுளத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், காந்தகுளத்து ஸ்ரீமுனியப்பசாமி காளிஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா, கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா நிறைவு நாளான நேற்று பால்குட உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக கலியுகம் கண்ட விநாயகர் ஆலயத்தில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், இளநீர் காவடி, அக்னிச்சட்டி மற்றும் அலகு குத்தி பரமக்குடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து காந்தகுளத்து முனியப்ப சுவாமி கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமன பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை காந்தகுளத்து ஸ்ரீமுனியப்பசாமி கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
The post பரமக்குடியில் கோயில் பால்குட உற்சவம் appeared first on Dinakaran.